Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சச்சின் டெண்டுல்கருக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

Sasikala| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்துள்ளனர்.  இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று டுவிட்டரில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சச்சினுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்து பதில் டுவீட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் 'நன்றி தலைவா' என்று குறிப்பிட்டுள்ளார்.

 
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் சச்சின் என பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தை அவரின் நண்பர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார்.
 
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லரை 21/2 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் வேலையில் சச்சின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :