வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 மே 2016 (14:24 IST)

சபாஷ் நாயுடுவின் சங்கீதம் தொடங்கியது

சபாஷ் நாயுடுவின் சங்கீதம் தொடங்கியது

கமல் நடிப்பில் விரைவில் தொடங்க உள்ள சபாஷ் நாயுடுவின் ஒரு பாடல் கம்போஸிங் முடிந்து ஒலிப்பதிவும் நடந்துள்ளது.


 
 
கமல் தயாரிக்கும் படங்களுக்கு இளையராஜா இசை என்பது எழுதப்படாத விதி. ஆனால், கடந்த வருடங்களில் சில விதிமீறல்கள். இளையராஜா இசையமைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும், சபாஷ் நாயுடு படத்தில் கமலும், இளையராஜாவும் இணைந்துள்ளனர்.
 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாடலை ரம்யா என்எஸ்கே மற்றும் விஷால் தத்லானியை பாட வைத்து ஒலிப்பதிவு செய்துள்ளார் இளையராஜா. 
 
அடுத்தடுத்த பாடல்களுக்கான கம்போஸிங் நடந்து வருகிறது.