சி3 வசூல்... சாதனையா, சரித்திரமா?

Sasikala| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (10:13 IST)
ரஜினிக்கு பிறகு சூர்யா படம்தான் அதிக வியாபாரமாகிறது என்றார்கள்... 200 கோடியை எட்டிப் பிடிக்கும் என்றார்கள்... ஆனால்,  சி 3 படத்தின் முதல்நாள் வசூல் அப்படியொன்றும் றெக்கைகட்டி பறக்கவில்லை.

 
கடந்த 9 -ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகம் - 7.35 கோடிகள்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா - 5.53 கோடிகள்
கேரளா - 2.31 கோடிகள்
கர்நாடகா - 2.3 கோடிகள்
 
மொத்தம் - 17.49 கோடிகள்.
 
தமிழின் முன்னணி நடிகர்களின் படவசூலை வெட்டியும் ஒட்டியுமே இந்த வசூல் உள்ளது. இதனை சாதனை வசூல் என்றோ சரித்திர வசூல் என்றோ சொல்ல முடியுமா? ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :