1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (12:10 IST)

தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்காக திகழ்வோம் - தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு சூளுரை

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் தலைவராக தாணுவும், துணைத்தலைவர்களாக தேனப்பன், கதிரேசன் ஆகியோரும், பொருளாளராக டி.ஜி.தியாகராஜனும், செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தாணு தவிர மற்றவர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
தலைவராக பொறுப்பேற்ற தாணு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
தயாரிப்பாளர் சங்கம் அறவழியில் அமைதி வழியில் இழந்த பெருமையை மீட்டு இருக்கிறது. காலம் காலமாக கட்டி காப்பாற்றப்பட்ட திரையுலகினரின் மாண்பினை புதிதாக தேர்வு பெற்றுள்ள நிர்வாகிகளாகிய நாங்கள் பேணி காத்திடுவோம். தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் மனுக்களை திரும்ப பெற்றவர்களுக்கும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சகோதரர்களுக்கும் சங்கத்தில் பொறுப்பினை தந்து ஒரு சேர கலையுலகை காப்போம். 
 
வெளிவராமல் முடங்கி கிடக்கும் 200–க்கும் மேற்பட்ட படங்களை திரையிட நடவடிக்கை எடுத்து தயாரிப்பாளர் நலனை பாதுகாப்போம். இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை செய்து சிறு பட தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்போம். 
 
- இவ்வாறு அவர் கூறினார்.