வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 அக்டோபர் 2014 (11:47 IST)

நான் சிகப்பு மனிதனுக்குப் பிறகு டூரிங் டாக்கீஸில் ஒன்றிணையும் எஸ்.ஏ.சி., இளையராஜா

எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மூன்று கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை அவர் உருவாக்கி வருகிறார்.
இது என்னுடைய கடைசிப் படம், இத்துடன் இயக்கத்திலிருந்து விடை பெறுகிறேன் என எஸ்.ஏ.சி. கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. டூரிங் டாக்கீஸுக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
 
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய ரஜினியின் நான் சிகப்பு மனிதன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் இருவரும் இணைகிறார்கள்.

டூரிங் டாக்கீஸ் இளையராஜாவின் 1001 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 70 வயது முதியவராக முக்கியமான வேடம் ஒன்றில் எஸ்.ஏ.சி. யும் நடிக்கிறார்.