1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (09:27 IST)

படமாகும் சர்ச்சைக்குரிய டண்டணக்கா பாடல்

லக்ஷ்மண் இயக்கிவரும் ரோமியோ ஜுலியட் படத்தில் டி.ராஜேந்தரின் ரசிகராக வருகிறார் ஜெயம் ரவி. அதன் காரணமாக, டி.ஆரின் புகழ்மிக்க டண்டணக்கா வரியை பயன்படுத்தி ஒரு பாடலை படத்தில் வைத்தனர். டி.இமான் இசையமைக்க, அனிருத் பாடிய அந்தப் பாடல் உடனடி ஹிட்டானது.
ஆனால், இணையத்தில் புழங்குகிறவர்கள், டண்டணக்கா பாடலை வைத்து டி.ஆரை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். சில தினங்களிலேயே, டி.ஆரை புகழ்ந்து எழுதப்பட்ட டண்டணக்கா பாடல், அவரை கிண்டல் செய்யும் பாடலாக மாற்றமடைந்தது. பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என, படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு டி.ஆர். நோட்டீஸ் அனுப்பினார்.
 
நான் உண்மையான டி.ஆர். ரசிகன். அதனால்தான் அந்தப் பாடலை படத்தில் வைத்தேன். அதனை டி.ஆரிடம் விளக்குவதற்காக அவரை  தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. ஒரு உண்மையான டி.ஆர் ரசிகனுக்கு இப்படியா ஆக வேண்டும் என வருத்தப்படுகிறார், படத்தின் இயக்குனர் லக்ஷ்மண்.
 
டண்டணக்கா பாடலை ஏற்கனவே படமாக்கிவிட்டனர். இப்போது மீண்டும் அப்பாடலை டி.ஆரை புகழும் காட்சிகளுடன் எடுத்து வருகின்றனர். இந்த இரு பாடலையும் டி.ஆரிடம் திரையிட்டு காட்டி அவர் எதை அனுமதிக்கிறாரோ, அதனை படத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர்.