செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (15:30 IST)

குடியரசு தினத்தில் பாகுபலி 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

ராஜமௌலி இயக்கத்தில் தயாரான பாகுபலி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியாக  இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
 
பாகுபலி படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6 ஆம் தேதி நிறைவடைந்தது. படத்தின் டிரெய்லரை குடியரசு தினத்தன்று வெளியிட  படக்குழு முடிவு செய்திருந்தது. படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முழுமையாக முடியாததால் படத்தின் டிரெய்லரை  பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு டிரெய்லர் வெளியாகாத நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை  படக்குழு வெளியிட்டுள்ளது.
 
இந்த போஸ்டரில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் இடம்பெற்றுள்ளனர்.