தெலுங்கில் ரீமேக் ஆகிறதா விஜய் சேதுபதி படம்?

CM| Last Modified வெள்ளி, 15 ஜூன் 2018 (11:10 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ தெலுங்கில் ரீமேக் ஆகிறது என பொய்யான தகவல் பரவி வருகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி ரிலீஸான படம் ‘நானும் ரெளடிதான்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே. பாலாஜி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்தனர்.
 
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்தார். பிளாக் காமெடிப் படமான இந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது.  தனுஷ் தயாரித்த இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கியது.
இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அது  உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. தான் எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை என ராஜ் தருண் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :