1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2017 (14:57 IST)

நாளை வெளியாகிறது பி.வாசுவின் சிவலிங்கா டீஸர்

கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் அடித்து கிளப்பிய படம் சிவலிங்கா. அதே பெயரில் அதனை தமிழில் எடுத்திருக்கிறார்.  ராகவா லாரன்ஸ் நாயகன்.

 
புறா கொலைக்கு சாட்சி சொல்லும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் லாரன்ஸ் சிபிசிஐடி  ஆபிசராக நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தின் முதல் டீஸரை நாளை வெளியிடுகின்றனர். அருந்ததி, சந்திரமுகி போன்று சிவலிங்காவும் எதிர்பாராத  கலெக்ஷனை தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்.