1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (17:26 IST)

ஆயுதபூஜைக்கு 600 திரையரங்குகளில் வெளியாகும் றெக்க

விஜய் சேதுபதியின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். தர்மதுரையும் ஹிட்டானதால் அவரது றெக்க படத்துக்கு ஏக டிமாண்ட்.


 
 
ஆக்ஷன் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை சிவபாலன் பிலிம்ஸ் வெளியிடுகிறது. படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுவதால் தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
றெக்கயில் விஜய் சேதுபதி கும்பகோணத்தை சேர்ந்தவராகவும், லட்சுமி மேனன் மதுரையை சேர்ந்தவராகவும் நடித்துள்ளனர். ஆயுதபூஜைக்கு படம் வெளியாகிறது.