Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் இணைகிறது ராதாமோகன் – அருள்நிதி கூட்டணி

Cauveri Manickam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:20 IST)
இயக்குநர் ராதாமோகனும், நடிகர் அருள்நிதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘பிருந்தாவனம்’. ‘மொழி’ ஜோதிகாவைப் போல வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அருள்நிதி. அவருக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு  ‘யு’ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. 
 
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கப் போவது ராதாமோகன் தான் எனத் தெரிவித்துள்ளார் அருள்நிதி.  ‘எனக்கு ரொம்பவும் கம்ஃபர்ட்டான இயக்குநர் அவர்’ எனத் தெரிவித்திருக்கிறார் அருள்நிதி. அதனால்தான், கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் ஜூலை மாதம் முதல் தொடங்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :