வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 11 மே 2017 (22:50 IST)

இந்த நடிகை என் மனைவியின் யங் வெர்ஷன்: பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சிகிருஷ்ணா, நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் வம்சிகிருஷ்ணா தற்போது 'நட்சத்திரம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய்தரம் தேஜ் மற்றும் ரெஜினா நடித்துள்ளனர்.



 


இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரெஜினாவின் நடிப்பை பார்த்து அசந்துபோன் வம்சிகிருஷ்ணா, 'என் மனைவி சிறுவயதில் இருந்தது போலவே ரெஜினா இருக்கின்றார். இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்று கூறினாராம். ஏற்கனவே ரெஜினா, தென்னிந்திய நடிகைகளில் சிக்ஸ்பேக் வைத்துள்ள ஒரே நடிகை என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் ரெஜினா நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இவர் ஏற்கனவே நடித்த 'கேடிபில்லா கில்லாடி ரங்கா, 'மாநகரம்' போன்ற படங்கள் நல்ல ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.