'விஜய் 61' படத்தின் வியக்க வைக்கும் வியாபாரம்


sivalingam| Last Modified வியாழன், 18 மே 2017 (06:04 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பிய நாடான போலந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 


இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது முதல்கட்டமாக இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை கோல்ட்மைன்ஸ் நிறுவனம் ரூ.10.8 கோடி கொடுத்து உரிமை பெற்றுள்ளது. விஜய் நடித்த படங்களில் இந்தி சாட்டிலைட் உரிமைக்கு கொடுக்கப்பட்ட தொகைகளில் இதுவே மிகப்பெரிய தொகை ஆகும்.

விஜய்-அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பே இந்த பெரிய தொகைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :