Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் இணையும் சூர்யா, கௌதம்

Sasikala| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (10:59 IST)
கௌதமின் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகியதுடன், இனிமேல் நானும் கௌதமும் இணைய வாய்ப்பேயில்லை என்று  அறிக்கைவிட்டார் சூர்யா. காலம் அனைத்தையும் மாற்றியுள்ளது.

 
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சூர்யா, அறிக்கை வெளியிட்ட அன்றே அதனை செய்திருக்க வேண்டாம்  என்று தோன்றியதாகவும், தனது பக்கம் இருக்கும் தவறை சரி செய்ய முயல்வதாகவும் கூறினார்.
 
சூர்யா, கௌதமிடையே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பஞ்சாயத்து பேசியிருக்கிறார். நல்ல செய்தி என்னவென்றால்,  மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படம் செய்கிறார்கள்.
 
பிரிந்தவர் கூடினால் கோடி ஆனந்தம்... அந்த ஆனந்தத்தில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டீங்கன்னா ரசிகர்களும்  ஹேப்பியாயிடுவாங்க.


இதில் மேலும் படிக்கவும் :