விஜய் படத்தில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்கியது ஏன்?


cauveri manickam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (16:18 IST)
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலகியதற்கான காரணம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

 

 
அட்லீ இயக்கத்தில் ‘மெர்சல்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதன்பிறகு, அவருடைய படத்தை இயக்கப் போவது ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்பது உறுதியாகி விட்டது. அந்தப் படத்தை, ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் விஜய், அடுத்த படத்துக்கு 50 கோடி ரூபாய் கேட்டாராம்.

அத்துடன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் தனக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகச் சொல்கிறார்கள். இவர்களுடைய சம்பளமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரும் நிலையில், படத்துக்கு 50 கோடியாவது ஆகும். எனவேதான் அந்தப் படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலக, அதற்குப் பதிலாக சன் டி.வி. தயாரிக்க இருக்கிறது

webdunia

இதில் மேலும் படிக்கவும் :