செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 மார்ச் 2017 (17:58 IST)

இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதலுக்கு இதுதான் காரணமா?

இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்தான் காரணம் என பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 


 

 
தமிழ் சினிமாவில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூட்டணி பிரபலமான வெற்றி கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் நல்ல நண்பரகள். இருவரும் இணைந்து சுமார் 2500க்கும் அதிகமான பாடல்களை வெளியிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பாலசுப்பிரமணியம் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பாடியுள்ளது குறித்து இளையராஜா தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து இனி இளையராஜா பாடல்களை பாட போவதில்லை என பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.
 
இதையடுத்து தமிழ் சினிமாவில் பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
 
கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம், அந்த கச்சேரியில் பாட ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இளையராஜா மறுத்ததால் பாலசுப்பிரமணியம் அந்த கச்சேரியை புறக்கணித்து விட்டார். 
 
இதையடுத்து அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என இளையராஜா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
 
இதுகாரணம் இளையராஜா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.