’பைரவா’ படத்தை வெளியிடாத தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை?


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 12 ஜனவரி 2017 (11:56 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தை திரையிடாத திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

விஜய் நடிப்பில், பரதன் எழுதி, இயக்கியுள்ள பைரவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை இஃபார் இன்டர்நேஷனல் வாங்கியுள்ளது.

ஆனால், கேரளாவில் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, அரசு மற்றும் தியேட்டர் சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மட்டுமே

திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, மல்ட்டி ஃபிளக்ஸ், மால் போன்ற இடங்களில்தான் திரைப்படங்கள் தற்போது திரையிடப்படுகின்றன.

இதனால், பைரவா படத்தை திரையிட ஒப்புதல் தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கம்போல, பைரவா படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என

பைரவா விநியோகப் பணிகளை மேற்கொண்டுள்ள சயுஜ்யம் சினி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

தியேட்டர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், படத்தை வெளியிட மறுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :