Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த நடிகையுடன் டேட்டிங் செய்ய ஒரே ஒரு கண்டிஷன் தான்....


Sugapriya Prakash| Last Updated: சனி, 7 அக்டோபர் 2017 (18:24 IST)
கண்டேன் என்னும் தமிழ் படத்தில் நடித்தவர் ராஷ்மி கவுதம். இவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 

 
 
நிறைய படங்களில் நடித்த போதும் அதிர்ஷ்ட இன்னமும் அவர் வீட்டுக் கதவை தட்டவில்லை. இவரது ஒரு படம் கூட ஹிட் அடிக்கவில்லை. 
 
ராஷ்மி கவுதம் தெலுங்கில் தற்போது நடித்துள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் தனக்கு நல்ல பெயரை பெற்று தரும் என மலையாய் நம்பியுள்ளார்.
 
மேலும், ஒரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் டோலிவுட் கொஞ்சம் கிரங்கிபோய்தான் உள்ளது.
 
அது என்னவெனில், இப்படத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்கிறாரோ அவர் தன்னுடன் டேட்டிங் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார். 
 
இதனை ஒரு வீடியோ பதிவாக ராஷ்மி பதிவிட்டு வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :