ரூ. 5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ. 1 கோடி கொடுத்தாக அளந்துவிட்ட லாரன்ஸ்: அம்பலபடுத்திய நடிகர்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (10:36 IST)
ஜல்லிக்கட்டு போரட்டம் நடந்த போது ரூ. 1 கோடி தருவதாக அறிவித்த ராகவா லாரன்ஸ் அதை தரவில்லை அது வெறும் பொய் என பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.

 
 
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுல் ஒருவர் பயில்வான் ரங்கநாதன். இவர் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 
 
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது ரூ.1 கோடி தருகிறேன், தொடர்ந்து போராட்டத்தை நடத்துங்கள் என்று லாரன்ஸ் கூறியிருந்தது அனைவருக்கும் தெரியும். 
 
போராட்டம் முடிவு பெற்ற பின்னர், மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் கொண்டு வந்ததாக செய்தியாளர் சந்திப்பில் லாரன்ஸ் தெரிவித்தார்.
 
ஆனால் இவை அனைத்தும் பொய்க்கதை என கூறி நடிகர் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் லாரன்ஸ் ரூ. 1 கோடி கொடுத்தார் என்று சொல்வது பொய், அவர் எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார். அவர் ரூ. 5 லட்ச வரை தான் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 
 
மேலும், லாரன்ஸ் ராகவேந்திரா சாமியை மனதில் வைத்து உண்மையை சொல்ல வேண்டும் என்றும் பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :