Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரம்ஜானைக் குறிவைக்கும் மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ்

Sasikala| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (15:35 IST)
மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை, ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் வெளியிட  திட்டமிட்டுள்ளனர்.
 
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து  விட்டது. தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம், தற்போது சென்னையில் படமாகி வருகிறது. தொடர்ந்து, வியட்நாம் செல்ல இருக்கிறார்கள். 
 
இந்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர், ஜூன் மாத ரம்ஜான் விடுமுறையைக் குறிவைத்து பணியாற்றி வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ்  ஜெயராஜ்.


இதில் மேலும் படிக்கவும் :