சம்பளம் விஷயத்தில் கறாரா? கடுப்பாகி உண்மையை உளறிய ரகுல் ப்ரீத் சிங்!

Papiksha| Last Updated: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (15:39 IST)
தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 


 
இந்நிலையில் அண்மையில்  ரகுல் ப்ரீத் சிங் சம்பள விஷயத்தில் கறார் காட்டுகிறார் என பேச்சு அடிபட்டு பரவலாக பேசப்பட்டது. இது அவரது காதில் விழ அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் " சம்பள விஷயத்தில் நான் கறார் என்று பலரும் பேசுகிறார்கள். ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கவேண்டும் என ஒப்பந்தம் செய்து படத்தில் நடிக்கிறேன். ஆனால், படம் வெளியான பிறகு பேசியபடி சம்பளத்தை தர மறுத்தால் நான் ஏற்பேன்..? நிச்சயம் ஏற்க மாட்டேன், அது எனக்கு பிடிக்காத விஷயம்,  இதை வைத்து நான் சம்பள விஷயத்தில் கெடுபிடியாக இருக்கிறேன் என்று விமர்சித்தால் நான் அதை பற்றிக் கவலைப்பட மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
 
இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்ஸ் " ஆமா, படம் வெளியாகி சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லனா என்ன பண்ணமுடியும்? " என கேள்வி எழுப்பி கேட்டு வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :