1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (12:45 IST)

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் ரஜினி...

ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போகிறாரோ இல்லையோ ஆனால் அடுத்தடுத்து படத்தில் நடிக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.இது அரசியல் கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என தகவல் வந்தன. 
 
அந்த படத்திற்கு நாற்காலி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின.ஆனால் இதை முருகதாஸ் மறுத்துள்ளார். 
தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்திகள்,வெளியாகின்றன.
 
இதனையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரஜினியின் அடுத்த படத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வேளையில் இந்த செய்திகள் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.