வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (10:21 IST)

அஜீத்துக்கு ஆண் குழந்தை - ரஜினி வாழ்த்து

அஜீத் - ஷாலினி தம்பதிக்கு கடந்த 2 -ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஏற்கனவே அனொஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில், புதிதாக பிறந்த ஆண் குழந்தையை அஜீத் ரசிகர்களும், திரையுலகினரும் குட்டி தல என பெயர்சூட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அஜீத்துக்கு போன் செய்த ரஜினி, குழந்தை பிறந்ததுக்காக அவருக்கு வாழ்த்து கூறினார். அவரைத் தொடர்ந்து லதா ரஜினிகாந்தும் அஜீத், ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 
மகனுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் அஜீத் - ஷாலினி தம்பதியினர்.