Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினி அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் கதிதான். மயில்சாமி


sivalingam| Last Modified திங்கள், 15 மே 2017 (22:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்தபோது பேசிய பேச்சில் இருந்து அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே யூகிக்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்ய ரஜினி நிச்சயம் வருவார் என்றும் தனிக்கட்சி அல்லது பாஜக இவற்றில் இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.


 


இந்த நிலையில் ரஜினிக்கு அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் எந்த அளவுக்கு ஓட்டு வாங்குவார் என்பது குறித்து விவாதம் ஒன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்று இரவு நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி கூறியதாவது:

“ரஜினிகாந்த அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. வந்தால் விஜயகாந்த் முதல் தேர்தலில் பெற்ற 24 லட்சம் வாக்குகளை விட அதிகமாக, 60 லட்சம் வாக்குகள் பெறுவார்” என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :