வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 7 மே 2015 (14:45 IST)

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 
சௌந்தர்யாவுக்கும் கட்டுமானத்துறையில் பிரபலமாக இருக்கும் அஸ்வினுக்கும் கடந்த 2010 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ரஜினியின் படங்களில் கிராபிக்ஸ் டிஸைனராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். லைவ் அனிமேஷன் படமான இது சரியாக அமையவில்லை.

சௌந்தர்யா படம் இயக்குவதை கைவிட்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என்று ரஜினி வெளிப்படையாக பேசினார்.
 
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சௌந்தர்யா அஸ்வினுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட, உடனடியாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரவு பத்து முப்பது மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. 
 
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.