வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 9 ஜூன் 2014 (12:54 IST)

கோச்சடையான் படத்தைப் பார்க்க கருணாநிதிக்கு அழைப்பு விடுத்த ரஜினி

நேற்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்த ரஜினி தனது கோச்சடையான் படத்தை பார்க்க கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
125 கோடி ரூபாயில் தயாரானதாகச் சொல்லப்படும் கோச்சடையான் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடுகிறது. ஆறு மொழிகளில் வெளியானதாகச் சொல்லப்படும் இப்படம் மற்ற நான்கு மொழிகளிலும் பெருத்த சறுக்கலை சந்தித்தது. இந்தியில் படம் சரியாகப் போகவில்லை என்பதை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகரே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தமிழ், தெலுங்கில் படத்தை முடிந்தவரை ஓட்டுவதுதான் தயாரிப்பாளர்களின் இப்போதைய ஒரே வாய்ப்பாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் ரஜினி சந்தித்தார். அப்போது கோச்சடையான் படத்தைப் பார்க்க அவருக்கு அழைப்பு விடுத்தார். கருணாநிதியும் ரஜினியின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
 
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் அருணாச்சலம் படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த் சிறந்த நடிகராக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டார். ஆட்சியில் இல்லையெனினும் கோச்சடையான் பார்த்து அதன் சிறப்புகளை கருணாநிதி வாழ்த்துக் கடிதமாக எழுதுவார் என ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.