ரஜினிகாந்த் நேர்மையற்றவர்: துணிச்சலுடன் விளாசும் சீமான்!

ரஜினிகாந்த் நேர்மையற்றவர்: துணிச்சலுடன் விளாசும் சீமான்!


Caston| Last Updated: வெள்ளி, 19 மே 2017 (16:43 IST)
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கள் கூறி வருகின்றனர். அனைவரும் அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறார்கள், அவரை புகழ்கிறார்கள் ஆனால் சீமான் மட்டும் நடிகர் ரஜினி நேர்மையற்றவர் எனவும் அவர் அரசியலுக்கு வருவதற்கான அவசியமே இல்லை என கூறியுள்ளார்.

 
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விமர்சித்தால் அது தங்களுக்கு எதிர்வினையாகிவிடுமோ என்னமோ எல்லா அரசியல்வாதிகளும் அவரை வரவேற்கின்றனர். நேர்மையானவர், நல்லவர், வல்லவர் என புகழ்கின்றனர். எந்த விமர்சனத்தை வைக்கவும் அவர்கள் துணிவது இல்லை.
 
ஆனால் முதன் முதலாக ஒரு அரசியல் கட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி போன்ற விவகாரங்களில் ரஜினியின் நிலைப்பாடு என்னவென்றே தெரியாது. அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இல்லை.
 
ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர், இந்த மண்ணை சேர்ந்தவர் தான் இந்த மண்ணை ஆள வேண்டும். ரஜினி மிகுந்த நேர்மையாளர் என கூறுவது மிகவும் தவறான கருத்து. இதுவரையில் ரஜினி நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில் தான் அவர் சம்பளம் வாங்கினாரா என சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :