சென்னை திரும்பினார் ரஜினி: அரசியல் அறிவிப்பு எப்போது?


sivalingam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (05:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் நேற்று இரவு அவர் சென்னை திரும்பினார். 


 
 
'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் இன்னும் ஒரிரு நாட்களில் கலந்து கொள்ளும் ரஜினி, வெகுவிரைவில் அரசியல் பிரவேச குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ரசிகர்களை சந்திக்கும் அடுத்தகட்ட தேதி குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிடுவார் என்ரும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
 
மேலும் அமெரிக்கவிலுள்ள காசினோ ஒன்றில் ரஜினி சூதாடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைக்கும் அவர் விளக்கமளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :