1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (13:25 IST)

ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் பளிச் பேட்டி

ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். 

 
பின்னர் சத்யநாராயணா ரூ.25 ஆயிரம் செலுத்தி, ராமேசுவரம் காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார்.

தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெறவும், காவிரி பிரச்சினையில் தீர்வு ஏற்படவும், தமிழக-கர்நாடக மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன் என்றார்.
 
மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவது எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பார் என்று கூறினார்.