1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 அக்டோபர் 2014 (12:20 IST)

ரஜினி வர்றார், உற்சாகத்தில் ஸ்காட்லாந்த் சுற்றுலாத்துறை

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ட்ரையாலஜியின் மூன்று பாகங்களும் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. அதேபோல் அவதார் படத்தின் சில காட்சிகள்.
 
உலகம் முழுவதும் செல்லக் கூடிய இதுபோன்ற படங்கள் தங்கள் நாட்டில் படமாக்கப்பட்டால் உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை அப்படங்கள் தங்கள் தேசத்தை நோக்கி ஈர்க்கும், சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்று ஒவ்வொரு நாடும் நினைப்பதுண்டு. 
அதன் காரணமாக லார்ட் ஆஃப் த ரிங்ஸ், அவதார் படங்களின் படப்பிடிப்புக்கு நியூசிலாந்து அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து கொடுத்தது. அவதாரின் அடுத்தடுத்தப் பாகங்களுக்கு உதவி செய்வதாகவும் வாக்களித்துள்ளது.
 
தற்போது லிங்கா படத்தின் பாடல்காட்சிக்காக ஸ்காட்லாந்த் செல்லவுள்ளனர். விசாவுக்கு அப்ளை செய்ததுமே ஸ்காட்லாந்தின் சுற்றுலாத்துறை மகிழ்ச்சியை தெரியப்படுத்தி உள்ளது. 
 
ரஜினியின் படம் தங்கள் நாட்டில் படமாக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் ஸ்காட்லாந்தை தேடி வருவார்கள் என்பதுதான் அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம். டிசம்பர் 12 லிங்கா திரைக்கு வருகிறது.