வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (14:41 IST)

ரஜினிக்கு ஜோடி வித்யாபாலன்...?

கபாலி படத்தின் போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனை கேட்டனர். அவர் மறுக்க, ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் வித்யாபாலனுக்கே வலைவீசியுள்ளனர்.

 
கபாலி படம் ரஜினிக்கு வெற்றி மட்டுமில்லை. தலித் அரசியல் எழுச்சியின் நாயகனாகவும் அவரை ஆக்கியது. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ரஜினி விரும்பியதில் ஆச்சரியமில்லை.
 
இந்தப் படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்கிறார். தற்போது ஸ்கிரிப்ட் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க வித்யாபாலனிடம் கேட்க உள்ளனர்.
 
மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.