Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளையதளபதிக்கு சூப்பர்ஸ்டாரின் தளபதி தலைப்பு இல்லை!!


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:59 IST)
'விஜய் 61' திரைப்படத்துக்கு தளபதி என்ற சூப்பர்ஸ்டார் படத்தலைப்பு வைக்கயுள்ளதாக தகவல் வெளியாகியது.

 
 
ஆனால், தற்போது இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 'தளபதி' திரைப்பட தலைப்புக்காக அதன் தயாரிப்பு நிறுவனமான ஜி.கே.ஃபிலிம்ஸிடம், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியது. 
 
ஆனால், ரஜினிகாந்தின் தளபதி பட தலைப்பை தர ஜி.கே.ஃபிலிம்ஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 'விஜய் 61' படத்திற்கு வேறு தலைப்பை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஆக்ஷன் கலந்த மசாலா படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3 கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து முக்கிய சண்டைக் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :