வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2014 (14:04 IST)

வைரமுத்துவை நேரில் சந்தித்த ரஜினி - உடல்நலம் விசாரித்தார்

பாடலாசிரியர் வைரமுத்துவை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சமீபத்தில் கோயம்புத்தூர் சென்ற வைரமுத்து முதுகுவலியால் அவதிப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தண்டுவடத்தில் நுண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவர் நலமாக உள்ளார்.
 
தற்போது ஓய்வு எடுத்து வரும் அவரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பூச்செண்டு தந்து விரைவில் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்ததுடன் அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.