வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (17:04 IST)

ரஜினிஹாசன்... சுராஜின் தமிழ்ப் பெயர் இது

ரஜினிஹாசன்... சுராஜின் தமிழ்ப் பெயர் இது

தேசிய விருது வென்ற மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முதல்முறையாக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார்.
 

 


கொஞ்சம் நடிங்க பாஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை சந்திரமோகன் இயக்கியுள்ளார். படத்தில் சுராஜின் கதாபாத்திரப் பெயர், ரஜினிஹாசன்.
 
நடிப்பு ஆசையில் விதவிதமான கெட்டப்புகள் போட்டு இயக்குனர்களிடம் நடிக்க வாய்ப்பு கேட்கும் கதாபாத்திரமாம் அவருக்கு. அதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். முக்கியமான வேடமாம். படத்தின் பெயரையும் இவரது கதாபாத்திரப் பெயரையும் பார்த்தால், காமெடிக்கு உத்தரவாதம் போலத்தான் தோன்றுகிறது.