Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine

ரஜினி படத்தை மறுத்த கே.வி.ஆனந்த்

Sasikala| Last Modified வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (10:43 IST)
ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பதே கமர்ஷியில் சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை. கே.வி.ஆனந்த்  அப்படியொரு வாய்ப்பை மறுத்தாரா? ஆச்சரியம் வேண்டாம். ரஜினி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அல்ல, ஒளிப்பதிவு  செய்வதற்கான வாய்ப்பு.

 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்துக்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். 2.0 படத்துக்கும் அவரைத்தான்  முதலில் அழைத்தார் ஷங்கர். 2.0 முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்பதாலும், கவண் படத்தின் கதை தயாராக  இருந்ததாலும் அந்த வாய்ப்பை ஆனந்த் மறுத்துள்ளார்.
 
இந்தத் தகவலை கே.வி.ஆனந்தே கூறியுள்ளார். தற்போது 2.0 படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :