ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்!


Caston| Last Modified திங்கள், 15 மே 2017 (11:09 IST)
நடிகர் ரஜினிகாந்த் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த சந்திப்பின் முதல் நாளான இன்று திண்டுக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

 
 
இந்த சந்திப்பின் தொடக்க நாளான இன்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன் என கூறியுள்ளார்.
 
அப்போது பேசிய ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்று முதல் தேர்தல் சமயங்களில் சிலர் ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறேன்.
 
என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன். படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரஜினி அரசியல் பற்றி பேசுவதாக கூறுகிறார்கள். ரசிகர் துணையால் அப்படி நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
 
நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உள்ளது. ஒருவேளை அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டேன் என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :