வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (11:16 IST)

பிறந்தநாளில் எந்திரன் 2 பூஜை - தயாரிப்பாளர் விருப்பத்தை நிறைவேற்றுவாரா ரஜினி?

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 எந்திரன் 2 படத்துக்கு பிரமாண்டமாக பூஜை போட தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


 

 
இனி கிடைக்க வேண்டியது, ரஜினியின் சம்மதம் மட்டும்தான். எந்திரன் 2 படத்துக்கான வேலைகளை ஷங்கர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
 
முதல்கட்டமாக படத்தின் பிராபிக்ஸ் பணிகளை கவனிக்கப் போகும் ஸ்ரீனிவாஸ் மோகனுடன் இணைந்து, படத்தில் கிராபிக்ஸ்கள் எப்படி அமைய வேண்டும் என ஆலோசனை நடத்தினார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவிடமும் அவர் கலந்தாலோசித்து வருகிறார்.
 
கபாலி முடிந்தபின் அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம். அதற்குமுன் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளன்று படத்தின் பூஜையை பிரமாண்டமாக நடத்த லைக்கா தரப்பு விரும்புகிறது.
 
பெரும் பட்ஜெட்டில் தயாராகும் படம். ஆரம்பம் முதலே விளம்பரத்தை அமர்க்களப்படுத்தினால்தான், பெரிய தொகையை வசூலிக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். பிறந்தநாளில் பூஜைபோட ரஜினி சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.