Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஞ்சித்துக்காக மீண்டும் பாட்ஷாவாகும் ரஜினி!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:52 IST)
கபாலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். 

 
 
2.0 படத்திற்கு பிறகு மறுபடியும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. 
 
இந்நிலையில், ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கும் பா.ரஞ்சித் மும்பையை கதைக்களமாக தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக ரஜினி போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், பாட்ஷாவை நினைவு படுத்துவது போல் மும்பை கதைக்களம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதற்காக ரஞ்சித் சமீபத்தில் மும்பை சென்று லொகேஷன் பார்த்து திரும்பியிருக்கிறார் என்றும் செய்திகள் பரவிவருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :