பந்தோபஸ்த் ஆனது சூர்யாவின் காப்பான் – ராஜமௌலி வெளியிட்ட் போஸ்டர் !

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (11:17 IST)
சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் காப்பான் படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் தலைப்பை இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும்  மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
ஆகஸ்ட் மாதம் இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும்  வெளியாகவுள்ள நிலையில் காப்பான் படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு பதிப்புக்கு பந்தோபஸ்த் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை சற்று முன்னர் இயக்குனர் ராஜமௌலி டிவிட்டரில் வெளியிட்டார்.
 
 

 இதில் மேலும் படிக்கவும் :