ரைசா வில்சனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (21:24 IST)
கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று பியார் பிரேமா காதல்'. ஹரிஷ் கிருஷ்ணன், ரைசா வில்சன் நடித்திருந்த இந்த ரொமான்ஸ் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார்

இந்த நிலையில் மீண்டும் யுவன் தயாரிக்கும் படம் ஒன்றில் ரைசா வில்சன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு , கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், பட்த்தொகுப்பாளர் அர்ஜுனா நாகா ஏ கே ஆகியோர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு 'ஆலிஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டு அதன் ஃபர்ச்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹீரோ உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்


இதில் மேலும் படிக்கவும் :