Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயத்ரிக்கு கை அமுக்கி விடும் ஆரவ்: இதையெல்லாம் வெளியே வச்சிக்கோங்க என திட்டும் ரைசா!

காயத்ரிக்கு கை அமுக்கி விடும் ஆரவ்: இதையெல்லாம் வெளியே வச்சிக்கோங்க என திட்டும் ரைசா!


Caston| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (16:50 IST)
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பின்னர் ரைசா விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் எனலாம். ஓவியா விவகாரத்தில் தாங்கள் செய்த தவறை முழுமையாக உணர்ந்தவர் ரைசா மட்டுமே எனலாம்.

 
 
அந்த அனுபவத்தின் மூலம் ரைசா ஓவியாவை போன்று பிக் பாஸ் வீட்டில் செயல்பட ஆரம்பித்துள்ளார். பொதுவாக யார் என்ன சொன்னாலும், யா யா ட்ரூ ட்ரூ என ஜிங்ஜாங் அடிக்கும் ரைசா தற்போது தனது கருத்துக்களை அவர்களுக்கு எதிராக வைத்து வாக்குவாதம் செய்யும் அளவுக்கு வந்துவிட்டார்.
 
காயத்ரி, ஷக்தியின் பேச்சை கேட்டு ஓவியா விவகாரத்தை தவறாக கையாண்ட ஆரவிடம் அவரது தவறை உணர வைத்து விவாதம் செய்து ஆரவையே தனது தவறை ஒத்துக்கொள்ள வைத்தார் ரைசா. மேலும் ரைசா சரியான காரணத்தை கூறி ஷக்தி மற்றும் காயத்ரியை நாமினேட் செய்து பிக் பாஸின் பாரட்டை பெற்று பரிசாக தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணியாக பிரித்து சலவை செய்யும் லக்ஸரி டாஸ்க் கொடுத்துள்ளார் பிக் பாஸ். ரைசா, ஆரவ், சினேகன், பிந்து மாதவி ஆகியோர் ஒரு அணியும், காயத்ரி, ஷக்தி, வையாபுரி, கணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் உள்ளனர்.
 
இதில் அதிக துணி துவைத்து குவாலிட்டியாக கொடுக்கும் அணிக்கு தான் வெற்றி பெறும். இந்நிலையில் இரு அணிகளுக்குள்ளும் பிக் பாஸ் அனுப்பும் துணிகளை கைப்பற்றுவதில் போட்டி நிலவுகிறது.
 
நேற்று இரு முறை துணிகள் வந்த போது குச்சி மூலம் இரு அணிகளும் துணிகளை எடுத்தது. இருந்த ஒரு குச்சியை ஒரு முறை சினேகன் அணியும் மற்றொரு முறை ஷக்தி அணியும் பயன்படுத்தியது.
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோ ஒன்றில் காயத்ரியின் கையை ஆரவ் அமுக்கி விட்டுக்கொண்டு இருக்கிறார். துணி துவைத்ததால் கையில் வலி ஏற்பட்டிருக்கலாம். அப்போது அங்கு வரும் ரைசா அதனை ஒரு மாதிரியா பார்த்துவிட்டு செல்கிறார். அதன் பின்னர் பிக் பாஸ் துணிகளை அனுப்புகிறார்.
 
அப்போது துவைப்பதற்கு துணிகளை அனுப்பும் ஸ்லைடரில் ஆரவ் ஏறி சென்று அமர்ந்து துணிகளை எடுக்கிறார். அப்போது ஷக்தி, காயத்ரி போன்ற எதிரணியினர் ஆர்வை கீழே இறங்கி வர சொல்கிறார்கள். குறிப்பாக காயத்ரி தம்பி நான் சொல்கிறேன் கீழே இறங்கி வா, என் பேச்சை கேள் என்கிறார். உடனே ஆரவ் கிழே இறங்கி வருகிறார்.
 
காயத்ரி சொன்னதும் கீழே இறங்கி வந்ததை ரைசா ஆரவிடம் கண்டிக்கிறார். கடுப்பான ரைசா ஆரவிடம் நீ ஏன் கீழே இறங்கி வந்தாய், உங்களோட அக்கா, தம்பி பாசத்தையெல்லாம் வெளிய வச்சிக்கோங்க. இங்க வேண்டாம் என்று கடுமையாகவே கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :