வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 மே 2019 (09:24 IST)

'காஞ்சனா இந்தி ரீமேக்: திடீரென வெளியேறிய ராகவா லாரன்ஸ்!

தமிழில் சூப்பர் ஹிட்டாகிய 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் 'லட்சுமி பாம்' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது என்றும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் இருந்து விலகுவதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் தான் வெளியே சொல்ல விரும்பவில்லை என்று கூறிய ராகவா லாரன்ஸ், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது கூட தனக்கு தெரியாது என்றும் மூன்றாவது ஒருவர் சொல்லியே தனக்கு தெரியும் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
ஒரு படைப்பாளிக்கு பணம், புகழைவிட மானம் பெரியது என்றும், தன்மானத்திற்கு இழுக்கு வரும் வகையில் இருந்தால் தான் அந்த பணியை தொடர முடியாது என்றும், அதனால் 'லட்சுமி பாம்' படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இருப்பினும் அக்சயகுமாருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று வெளியான 'லட்சுமி பாம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டிசைனில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.