Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதுச்சேரி அரசின் சிறந்த படமாக ரேடியோ பெட்டி தேர்வு


bala| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (14:59 IST)
புதுச்சேரி அரசின் 2016ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக ரேடியோ பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் பரிசினை முதல்வர் நாராயணசாமி வரும் 6ம் தேதி அளிக்கிறார்.

 

புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக ரேடியோ பெட்டி எனும் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது.

இப்படத்துக்கு சங்கரதாஸ்சுவாமிகள் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசினை வரும் 6-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் நாராயணசாமி வழங்க உள்ளார். இவ்விருதினை படத்தின் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :