வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (11:13 IST)

குஷ்புவிடம் பாடம் கற்க ஆசைப்படும் ராதிகா!

குஷ்புவிடம் பாடம் கற்க ஆசைப்படும் ராதிகா!

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் பிஸியாக செயல்படுபவர். காலை முதல் இரவு வரை டுவிட்டரில் புகுந்து விளையாடுவார் அவர். குஷ்புவின் பல டுவிட்டுகள் செய்திகளில் அடிக்கடி அடிபடும்.


 
 
அதே போல நடிகை ராதிகாவும் டுவிட்டரில் பிஸியாக செயல்படுபவர். இந்நிலையில் நடிகை ராதிகா குஷ்புவிடம் பாடம் கற்க ஆசைப்படுவதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.
 
நடிகை குஷ்பு சில நாட்களுக்கு முன்னர் தனது செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த செல்ஃபியில் குஷ்பு மிகவும் அழகாக இருப்பதாக கூறினர். நடிகை ராதிகாவும் அதில் அடங்குவார்.
 
குஷ்புவின் அந்த செல்ஃபி குறித்து கூறிய ராதிகா, செல்ஃபி எடுப்பதில் நீ மட்டும் தான் சிறந்தவர் குஷ்பு, உன்னிடமிருந்து அவசரமாக செல்ஃபி பாடம் கற்க வேண்டும் என்று ராதிகா டுவிட்டரில் கூறியிருந்தார்.