வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 13 அக்டோபர் 2014 (09:56 IST)

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் - போட்டியின்றி ராதிகா தேர்வு

தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் இருக்கிறார். அவர் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைவதைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுக்குழு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக கூட்டப்பட்டது.
 
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒரே மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ராதிகா சரத்குமாரே மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர்.
 
இவர்கள் தவிர துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.