லட்சுமிராயை ஏன் ஆட வைத்தேன்..? லாரன்ஸ் விளக்கம்

Sasikala| Last Modified வியாழன், 23 பிப்ரவரி 2017 (11:17 IST)
லாரன்ஸ் என்ன படம் எடுத்தாலும் அதுல லட்சுமி ராய் கண்டிப்பா இருப்பார்னு கால்சட்டை போட்ட பசங்கயெல்லாம் பேச  ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியென்னப்பா அவங்களுக்குள்ள கனெக்ஷன்னு ஊர் உலகம் பேசுமா இல்லியா?

 
அதுக்கு லாரன்ஸ் லாஜிக்கா ஒரு பதில் சொல்லியிருக்கார்.
 
அதாகப்பட்டது, நாளை வெளியாகவிருக்கிற மொட்ட சிவா கெட்ட சிவாவில் லட்சுமிராய் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.  நாயகியா நடிச்சுட்டு வர்ற அவரை எப்படி ஒரு பாடலுக்கு ஆட கூப்பிடறதுன்னு லாரன்சுக்கு தயக்கம். இயக்குனர்தான் கூப்டிருக்கார். உடனே லாரன்ஸ் பாட்டை அவருக்கு அனுப்பியிருக்கார். பாட்டு பிடிச்சதால உடனே ஆட லட்சுமிராய் ஒப்புக்  கொண்டாராம்.
 
ஆமாம்மா... டியூன் பிடிக்கலைன்னா லட்சுமிராய் ஆடியிருக்கவே மாட்டாங்க.


இதில் மேலும் படிக்கவும் :