குயீன் ரீமேக்கில் நடிக்க மறுத்த பாகுபலி நாயகி

Sasikala| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (17:46 IST)
பாலிவுட்டில் இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 'குயீன்' திரைப்படம் சூப்பர் டூப்பர்  ஹிட்டானது. இதைத் தொடர்ந்து இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர்  இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் நடிகை சுஹாசினி வசனம் எழுதி வரும் 'குயீன்' ரீமேக்கில் நடிக்க 'பாகுபலி' நாயகி  அனுஷ்காவை அனுகியதாகவும், கங்கனா ரனாவத்தின் நடிப்புடன் தனது நடிப்பு ஒப்பிடப்பட வாய்ப்புள்ளதாக கூறி, அவர் நடிக்க  மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில் தமன்னாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க சம்மதம் கூறியதாக கோலிவுட்  வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :