வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 21 மே 2015 (14:06 IST)

புலிக்குழுவின் புது ஐடியா - இதுவும் நல்லாயிருக்கே

படத்துக்கு பத்து வாரங்கள் யோசித்தால் அதை புரமோட் செய்ய பத்து மாதங்கள் யோசிக்க வேண்டும். அப்படியிருக்கிறது இன்றைய நிலைமை. சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் படத்தை விளம்பரப்படுத்தினால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும் என்ற நிலையில், புலி படக்குழு ஒரு புதுவித ஐடியாவுடன் களமிறங்கியுள்ளது.
படத்தில் பணியாற்றியவர்கள் தங்களின் படப்பிடிப்பு அனுபவங்களையும், விஜய் எப்படி அனுசரணையாக நடந்து கொண்டார் என்பதையும் பேசி வீடியோவில் பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர். புலி படம் குறித்த சிறந்த முன்னோட்டமாக இந்த வீடியோ இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இதனை பார்த்து வருகின்றனர்.
 
பர்ஸ்ட் லுக் வெளியாகும் முன்பே அதிரடி விளம்பரத்தை முடுக்கிவிட்டுள்ளது புலி யூனிட். அடுத்து எங்கே பாயப் போகிறார்களோ?