1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (18:43 IST)

புலி படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் புலி வெளியானது. படம் சரியில்லை என எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், முதல்நாள் கூட்டத்தில் புலி திரையரங்குகள் திணறின. 


 
 
நேற்று மட்டும் தமிழகத்தில் 10.75 கோடிகளை புலி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தயாரிப்பாளர்கள் தரப்பு இன்னும் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
விஜய்யின் முந்தையப் படம் கத்தி, முதல்நாளில் 12.5 கோடிகளை தமிழகத்தில் வசூலித்தது. சிறப்புக் காட்சியும், காலைக்காட்சியும் ரத்தானதால் கத்தியின் வசூலை புலியால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. 
 
படத்துக்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள், கத்தி அளவுக்கு புலி வசூலிக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.