Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தயாரிப்பாளர்கள் அவசரக் கூட்டம் – ஸ்டிரைக் வாபஸ்?

Cauveri Manickam| Last Modified சனி, 20 மே 2017 (13:39 IST)
விஷால் அறிவித்த ஸ்டிரைக்கிற்கு பல இடங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக்  கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.

 
சினிமாத்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய – மாநில அரசுகளை எதிர்த்து, வரும் 30ஆம் தேதி முதல் சினிமா  சார்ந்த அனைத்து சங்கங்களும் காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்தார் விஷால்.  ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டோம்  என வெளிப்படையாக அறிவித்துவிட்டன.
 
இந்நிலையில், பல வருடங்களாக செயல்படாமல் இருந்த திரைப்பட வர்த்தக சபை, மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. அத்துடன், பெப்சி உள்ளிட்ட மற்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக இதுவரை அறிவிக்கவில்லை. எனவே,  இதுகுறித்து விவாதிப்பதற்காக, தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :